மக்கள் எழுச்சி போராட்டத்திற்குத் தயார் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் பிரச்சினைகள் தீவிரமடைந்தால் மட்டுமே அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் தீர்வுகளை தேடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சிறிலங்கா அரச தலைவர் உட்பட முழு அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டுமெனவும் திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் சஜித்
தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கான சேவைகள் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை பலமான அரசியல் சக்தியை உருவாக்க அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 1 மணி நேரம் முன்
