தவிர்க்கப்படும் கொழும்பு துறைமுகம்: ஏனைய நாடுகளுக்கு பரிமாற்றப்படும் கொள்கலன்கள்
நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை போன்ற காரணங்களால் கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களின் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன.
நாட்டில் குழப்பம் காரணமாக கொழும்பு துறைமுகத்தைத் தவிர்த்து ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கு கொள்கலன்களின் பரிமாற்றங்கள் நகர்த்தப்பட்டன.
இதனால், ஜூன் மாதத்தில், கொள்கலன்களின் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் குறைந்து காணப்பட்டன.
கொச்சி சர்வதேச துறைமுகம்
நாட்டில் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருந்தபோதிலும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளில் மாற்றம் இருக்கவில்லை.
எனினும், பிரதான கப்பல் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து மாற்று வழிகளை தெரிவு செய்ததாக உள்ளூர் கப்பல் முகவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கையும், கொள்கலன்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், கொச்சி சர்வதேச துறைமுகம் உட்பட பல தென்னிந்திய துறைமுகங்களில்
ஜூலை வரை போக்குவரத்து கணிசமான அளவில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.