இலங்கை அரசியலில் உண்மையை பேசுவோர் படுகொலை அல்லது சிறைவாசம் - தானிஷ் அலி பகிரங்கம்!
தமிழர்களை பிரித்ததே ரணில் தான் என்பது கூட தெரியாமல் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அது தமிழர்களின் பிழை எனவும் காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து, சிறிலங்கா வரலாற்றில் ஒரு அதிபரை விரட்டியதோடு, அமைச்சரவையையும் பதவிவிலகச் செய்து எந்த வித வழிநடத்தல்களும் இன்றி மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்திருந்தோம்.
தற்போது ரணில் பதவி வகித்தாலும் ராஜபக்சக்களும் ரணிலும் ஒரே கூட்டணியாகத் தான் செயற்பட்டு வருகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழரை பிரித்தது ரணிலே
அதுமட்டுமன்றி இலங்கை அரசியல் என்பது உண்மையை பகிரங்கமாகத் தெரிவித்தால் படுகொலை செய்யப்படுவோம் அல்லது சிறைகளில் அடைக்கப்படுவோம் இதுவே நிதர்சனம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, 2002இல் சமாதான பேச்சுவார்த்தை என்ற ஒன்றை கொண்டு வந்து தமிழர்களை பிரித்ததே ரணில் ராஜபக்ச தான் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்தார்.
யுத்தம் நடந்த காலத்தில் ரணில் இராணுவத்தினரை சென்று பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. ஏனெனில் தமிழர்கள் மத்தியில் தான் யுத்தத்தை விரும்பவில்லை என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
இப்பொழுது தமிழர்களை விட்டு விட்டார். தற்போது அவருக்கு தான் சிங்கள மக்களுடன் இருப்பதாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்.
இலங்கையை ஏன் பிரிக்க வேண்டும்?. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
