கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு - டக்ளஸ் உறுதி

Puttalam Douglas Devananda Sri Lanka Negombo
By Kalaimathy Apr 05, 2023 11:58 AM GMT
Report

கடற்றொழில் மேற்கொள்ளப்படும் முக்கிய பிரதேசங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதேவேளை கற்பிட்டி, கந்தக்குளி சென். அந்தனி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

அதனடிப்படையில், இன்றைய தினம் புத்தளம், கற்பிட்டி, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்கு பயணத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன் நியாயமான தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

கடற்றொழிலாளர்களுடன் சந்திப்பு

கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு - டக்ளஸ் உறுதி | Sri Lanka Puttalam Douglas Devananda Negombo

தொடர்ந்து, நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருக்கின்ற கற்பிட்டி, கந்தக்குளி முகத்துவார பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும் முகத்துவாரப் பகுதியை தூர்வாருவதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கந்தக்குளி முகத்துவாரம் தூர்வாரப்படுவதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 200 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

அதனையடுத்து, சிலாபம் மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள மீன் விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன் வியாபாரிகள் மற்றும் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மீன்பிடி பிரதேசம் வரையறை

கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு - டக்ளஸ் உறுதி | Sri Lanka Puttalam Douglas Devananda Negombo

பின்னர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தெப்பத்தின் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளுகின்ற சிறுதொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறிப்பாக, நீர்கொழும்பு பிரதேசத்தில் சுமார் 110 தெப்பம் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில், பாரம்பரியமாக தாங்கள் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 2 கிலோமீற்றர் கடல்பரப்பை தமக்கான மீன்பிடிப் பிரதேசமாக வரையறை செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் தமது பாரம்பரிய தொழில் பிரதேசத்தினுள் இயந்திரப் படகுகள் மூலம் தொழில் செய்பவர்கள் உட்பட ஏனையோர் தொழிலை மேற்கொள்வதால் வாழ்வாதாரத்தை இழப்பதாகவும் முறையிட்டனர்.

கலந்துரையாடல்

கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு - டக்ளஸ் உறுதி | Sri Lanka Puttalam Douglas Devananda Negombo

குறித்த விடயம் உட்பட தெப்பம் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படுமென இதன்போது கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி