றம்புக்கண துப்பாக்கிச் சூடு- உடன் நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவு!
Sri Lanka Police
Kegalle
Rambukkana
Sri Lanka
By Kalaimathy
கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், றம்புக்கண காவல்துறை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் மற்றும் றம்புக்கண காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
றம்புக்கண சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், சாட்சியாளர்களிடம் சுயாதீன விசாரணைகளை நடத்தவும் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே றம்புக்கண ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் சிலர் காயமடைந்தமை தொடர்பான விசாரணைகளை காவல்துறைமா அதிபர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி