“தமிழ் இனப்படுகொலை”- கனேடிய பிரதமரின் அறிக்கையை நிராகரித்தது சிறிலங்கா அரசு
கறுப்பு ஜூலை கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 23 ஜூலை 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றிய குறிப்பை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது உள்ளூர் வாக்கு வங்கி தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டது.
பொய்யான அறிக்கைகள் இன நல்லிணக்கத்திற்கு தடை
இவ்வாறான பொய்யான அறிக்கைகள் இன நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பாரம்பரியத்தை கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடா மற்றும் அதன் தலைவர்களை இலங்கை கேட்டுக்கொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/ad19cf46-9e2f-428f-920f-4b3e33ac05d7/23-64c036c5cfae7.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)