சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை
Sri Lanka Parliament
Sri Lanka
Kanchana Wijesekera
ICC World Cup 2023
By Dilakshan
இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (17)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இராஜாங்க அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமித்தார்.
பிரச்சினைக்கு தீர்வு
அமைச்சர்களான திரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அதற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களை புறந்தள்ளி அனைவரும் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 19 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்