ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..! ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்
ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
மேலும், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தல் மற்றும் திறைசேரியின் அனுமதியுடன் இந்தக் கொடுப்பனவுகளை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலதிக நடவடிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்களில் நீண்டகாலமாக சேவையாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை
மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஆரம்பம் வரை அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
இராஜாங்க அமைச்சர் சானக வக்கம்புர, அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவித்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா
