முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை குறைக்க தீர்மானம்!
முச்சக்கரவண்டியின் பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் அறிவித்துள்ளார்.
அத்துடன், முதலாவது கிலோமீற்றருக்காக தற்போது அறவிடப்படும், 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைப்பு
உலகச்சந்தையில் எரிபொருளுக்கான விலை வீழ்ச்சியை கண்டதையடுத்து, நேற்றிரவு 10 மணி முதல் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையிலேயே முச்சக்கர வண்டி கட்டணங்களையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்