தென்னிலங்கையின் அரச ஊடகத்தின் பணிப்பாளர் பதவி விலகல்!
தென்னிலங்கையில் இயங்கும் அரச ஊடகம் ஒன்றின் பணிப்பாளர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட விடுத்த உத்தரவுக்கு அமையவே அவர் பதவியில் இருந்து விலகியுள்ளா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரச ஊடக நிறுவனமான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஜயம்பதி ஹின்கெந்த இராஜினாமா செய்துள்ளார்.
இவரது பதவி விலகலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் கடந்த காலத்தில் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபயவின் செயலாளராக பணியாற்றிய சிரேஷ்ட அரச சேவை அதிகாரியான பி.பீ. ஜயசுந்தரவும் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
