பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வெடுத்துள்ள ரணிலின் கொள்கைகள்: ஷெஹான் சேமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கொள்கைகள், நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த கொள்கைகள் அறிமுகப்பப்பட்ட போது, சில சவால்கள் அல்லது விமர்சனங்களை எதிர்நோக்கியிருந்தாலும் தற்பொழுது சாதகமான பலன்களையே அவை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தங்களின் இயலாமையை முன்பு வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியோர் இப்போது தேர்தல்களுக்கு முன்னதாக வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
எரிபொருள் விலை
நேரடி வரிவிதிப்பைக் குறைத்தல், வற் வரியை நீக்குதல் மற்றும் எரிபொருள் விலைகளைக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும். அந்த நடவடிக்கைகளே பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
அந்தவகையில், ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் நாட்டின் தலைவரானல் அவர்கள் நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளுவார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். இதன் விளைவாக, அரசாங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் மாதத்திற்கு சுமார் ரூ. 25,000 ஆக அதிகரிக்கப்படும். இவை அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்படும்,
வருமான வரி
கூடுதலாக, வருமான வரியைக் குறைப்பதற்கான எங்கள் முன்மொழிவை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம், நாட்டின் செழிப்பில் பொதுமக்கள் பங்களிப்பதை உறுதிசெய்கிறோம்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கம் இல்லாமல், அனைவருக்கும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |