இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!
இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி (Strawberry) சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில் நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக நுவரெலியாவில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஸ்ட்ரோபரி செடிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் முதலீடு செய்தல்
இதில் 750,000 ரூபா விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுவதோடு மீதமுள்ள ஆறு இலட்சத்தை அந்தந்த விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் ஸ்ட்ரோபரி திட்டத்திற்கு 40 பாதுகாப்பான பசுமைக்குடில்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வீடுகள் அனைத்தையும் தொலையியக்கி (Remote control) மூலம் முழுமையாக தானியங்கி முறையில் செயற்படுத்த முடியுமென விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்