இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு குறித்து வெளியான தகவல்
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, குறிப்பிடப்பட்ட காலத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய மோதல்
அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,525.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதுடன், இது 51.5 வீத அதிகரிப்பாகும்.

எனினும், கடந்த செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு, முந்தைய ஆண்டின் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.8 வீத (25.6 மில்லியன் டொலர்கள்) சிறிய குறைவைக் காட்டியுள்ளது.
2025 செப்டெம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு 440.7 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் அது 415.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் மத்திய கிழக்கில் நிலவிய மோதல் நிலைமைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |