துருக்கி நில அதிர்வில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கை வழங்கியுள்ள உதவி!
Ali Sabry
Government Of Sri Lanka
Turkey
Earthquake
Turkey Earthquake
By Pakirathan
அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலஅதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு 4.6 டன் ஆடைகளை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான துருக்கி தூதுவரிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்றையதினம் இந்த ஆடைகளை கையளித்துள்ளார்.
துருக்கி மற்றும் இலங்கை இடையேயான உறவுகளை விளக்கிய அமைச்சர், துருக்கி மக்களுடன் இலங்கை அரசும், இலங்கை மக்களும் கொண்டுள்ள ஒற்றுமையையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உதவி
இந்த உதவித் திட்டத்திற்கு இலங்கையின் சில தனியார் ஆடைத் தொழிற்சாலைகள் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தன.
இதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை ஒரு தொகை தேயிலையை துருக்கிக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி