உச்சத்தை எட்டிய இலங்கையின் வரி வருமானம்
இலங்கையின் வரி வருமானம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 3,400 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பொருளாதார பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், முதன்மை இருப்பு, ஆண்டு இலக்கை விட 200 பில்லியன் ரூபாயை கடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுங்க திணைக்களம்
அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,545 பில்லியன் ரூபாயை வசூலித்துள்ளதுடன், இலக்கில் 103 சதவீதத்தை அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை சுங்க திணைக்களம் 1,679 பில்லியனை வசூலித்து, இலக்கில் 113 சதவீதத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்துடன், மதுவரித்திணைக்களம் 176 பில்லியன் ரூபாயை வசூலித்து, செப்டம்பர் 23ஆம் திகதிக்குள், இலக்கில் 103 சதவீதத்தை அடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

