நாடளாவிய ரீதியில் விஸ்திரமடையும் மதுபான விற்பனை - புதிய நடவடிக்கைக்குத் தயார்!
சதொச விற்பனை நிலையங்களில் மதுபானம் விற்பனை செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக மதுபான உரிமங்களைப் பெறுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 300 சதொச விற்பனை நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஆட்சேபனை
எவ்வாறாயினும், பொதுமக்களின் ஆட்சேபனை மற்றும் சில சதொச வர்த்தக நிறுவனங்கள் அடிப்படை நியமங்களுக்கு இணங்கவில்லை என்பதனால் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விதிகளுக்கு இணங்காத சில சதொச நிறுவனங்களுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்கும் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை வழங்கப்பட்ட உரிமங்கள்
இவ்வாறான நிலையில், கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் தேவையான அனுமதிப்பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், சதொச நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கலால் திணைக்களம் இதுவரை சுமார் 6,000 மதுபான உரிமங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
