இலங்கைக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ள சீனா!
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, மாணவர்கள் மத்தியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில், ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக புத்தகங்களை அச்சுடுவதற்கான மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாடப்புத்தகம் அச்சிடும் பணி நிறைவடையும் நிலையில்
இந்த நிலையில், இலங்கையில் பாட புத்தகங்களை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த வருடத்திற்கான முதல் தவணை எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதால், பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என சிறிலங்காவின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீருடைகளை வழங்க முன்வந்துள்ள சீனா
இதேவேளை, பாடசாலை சீருடைகளில் 30 வீதமானவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 41 இலட்சம் மாணவர்களுக்கு தேவையான சீருடைகளில் 70 வீதமானவற்றை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதேவேளை, இலங்கையிலுள்ள சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சீன அரசாங்கத்தால் 5 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
