உடனடியாக அவசரகால சட்டத்தை மீளப்பெறுமாறு வலிறுத்தல்!
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
Bar Association of Sri Lanka
State of Emergency
By Kalaimathy
சிறிலங்காவின் பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றறை விடுத்துள்ளது.
தமது கோரிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்
மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
