ஐ.எம்.எவ் தாமதத்தால் சிறிலங்கா பங்குசந்தை தொடர்வீழச்சி
சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு நடுப்பகுதியில் கடன் வழங்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறிய நிலையில், இலங்கையின் பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இன்றைய தினமும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தனியார் கடன் வழங்குநர்களே காரணம் என கடனுக்கான நீதி அமைப்பின் 182 நாடுகளை சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வெளிநாட்டுக் கடன்
சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் பங்குகளில் பெரும்பாலானவை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் வடிவில் உள்ளதாகவும் அவற்றில் 40 வீதத்தை தனியார் கடன்வழங்குநர்கள் வைத்திருப்பதாகவும் கடனுக்கான நீதி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வட்டி வீதங்கள் மூலம் வெளிபுற கடனில் 50 வீதத்தை குறித்த தனியார் கடன் வழங்குநர்கள் மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்களும் அபிவிருத்தி தொடர்பான நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜெயதி கோஷ், தோமஸ் பிகெட்ரி, டானி ரொட்ரிக், ரவி
கான்பூர், யானிஸ் வரூஃபாகிஸ் மற்றும் ஹா-ஜூன் சாங் ஆகிய நிபுணர்கள் இந்த அறிக்கையில்
கையெழுத்திட்டுள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
