பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு!
மாணவர்கள்
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிப்புரை
அதற்கமைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக 0114 35 46 47 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.