அத்தியாவசிய பொருளின் விலை தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kalaimathy
சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சீனிக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துரித கதியில் அதிகரிக்கும் சீனியின் விலை
அதேவேளை தற்பொழுது நாட்டில் சீனிக்கான விலை துரித கதியில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விலை அதிகரிப்பை உலக சந்தையுடன் ஒப்பீடு செய்யும் போது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் அறிவிப்பு
அத்துடன் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி