இனியும் தமிழர் ஏமாறாது எம்மை நாமே ஆளக்கூடிய தீர்வைப் பெறவேண்டும் - பகிரங்க வலியுறுத்தல்!
இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஒரு முறை இனப்படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவாதத்தை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
புதிய அரசியல் யாப்பை அமைப்பதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாலும், அது ஒற்றையாட்சிக்கே வழிசெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
எனவே உலகிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவாக்கெடுப்பை கோரினால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி நகர முடியும் எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
