கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட ஆணையாளர், “ஜனவரி 1ஆம் திகதி எமது திணைக்களத்தில் 437,547 பேர் பதிவு செய்திருந்தனர், இன்று அது 10 இலட்சத்தை கடந்துள்ளது.
இலக்கு
இதில் வருமான ஏற்றத்தாழ்வையே பிரதானமாக இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த வருமானப் பங்கீட்டைப் பார்த்தால் அதிக வருமானம் கொண்ட குழு சுமார் 20%. இருந்து, அந்த குழுவில், மொத்த வருமானத்தில் 60% % அதிகமாக பிரிக்கப்பட்டுள்ளது.
20% என்று சொன்னால், அது சுமார் 50 லட்சம் பேர், அப்படியானால், இந்த 50 லட்சம் பேரை அடையாளம் காண்பதுதான் எங்களின் முதல் இலக்கு, ஏனென்றால், உண்மையான வரி வருமானம் பெறும் திறன் கொண்டவர்கள் இவர்கள்தான்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |