தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய அறிவிப்பு - குழந்தை ஆரோக்கியத் திட்டம்!
இலங்கையில், குழந்தைகளுக்கென இயற்கை முறையிலான சவற்காரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோப்பு தேயிலை இலைகளின் சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது எனவும், பிளாக் டீயின் வாசனையோடு இருக்கும் எனவும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தேயிலை தளிர்களை கொண்டு உயர் மருத்துவ குணம் கொண்ட குழந்தைகள் சவற்காரத்தை உற்பத்தி செய்துள்ளது.
இயற்கை முறை தயாரிப்பு

இயற்கையான பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த சவற்காரம் தயாரிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளின் தோலுக்கு பாதிப்பு ஏற்படாது என தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தயாரிப்பு காப்புரிமை சான்றிதழைப் பெற்றதன் பின்னர், வணிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய எந்தவொரு நபருக்கும் தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.