ரி20 தொடர் : பங்களாதேஷ் அணியுடன் மோதப்போகும் இலங்கை அணி அறிவிப்பு
Colombo
Sri Lanka Cricket
Bangladesh Cricket Team
By Sumithiran
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட ரி20 தொடருக்கான இலங்கை அணி இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மீண்டும் அழைக்கப்பட்ட வீரர்கள்
இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆட்ட விபரம் வருமாறு, 10 ஆம் திகதி முதலாவது போட்டி கண்டியிலும் 13 ஆம் திகதி இரண்டாவது போட்டி தம்புள்ளையிலும் 16 ஆம் திகதி மூன்றாவது போட்டி கொழும்பிலும் நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

