தாய்லாந்து அரசாங்கத்தின் நிபந்தனையை மீறியும் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை!
தாய்லாந்தில் தங்கியிருக்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அந்நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவை வெளியில் செல்ல வேண்டாம் என அந்நாட்டு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே, அவர் தாய்லாந்தில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி கோரியுள்ளார்.
தாய்லாந்தில் தஞ்சமடைந்த கோட்டாபய
கோட்டாபய, சிறிலங்காவில் இருந்து வெளியேறி மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரில் இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்கியிருந்த அவர், அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு தாய்லாந்து சென்றார்.
தாய்லாந்தில் தங்கியிருக்க அவருக்கு மூன்று மாத காலத்திற்கான விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட நிபந்தனை
இவ்வாறான நிலையில், தாய்லாந்தில் இருக்கும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அந்நாட்டுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் தாய்லாந்து அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.