கூட்டமைப்பிற்குள் மூண்டது பனிப்போர் - மாவைக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்!

Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Sri Lanka
By Kalaimathy Sep 09, 2022 09:45 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதன் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) வல்வெட்டித்துறை நகரசபை சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்ற தலைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மயூரன் வாக்களிக்க தவறியமை தொடர்பில் கடிதம்

கூட்டமைப்பிற்குள் மூண்டது பனிப்போர் - மாவைக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்! | Sri Lanka Tna Telo Parliament Tamil Arasu Kachchi

கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் மயூரன், தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்கத் தவறியமை தொடர்பிலும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததால், ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டது.

அந்த இடத்தை நிரப்புகின்ற தார்மீக உரிமை தமிழ்ஈழ விடுதலை இயக்கத்துக்கே இருந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள். மேற்படி வெற்றிடத்திற்கு தங்கள் கட்சியால் தொடர்ச்சியான கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில் தங்கள் கட்சி உறுப்பினர் மயூரனுக்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

தவிசாளர் தெரிவில் குழப்பம்

கூட்டமைப்பிற்குள் மூண்டது பனிப்போர் - மாவைக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்! | Sri Lanka Tna Telo Parliament Tamil Arasu Kachchi

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்துறை  நகரசபை தவிசாளர் பதவி ரெலோவுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது. ரெலோவின் தவிசாளராக இருந்த கருணானந்தராஜா உயிரிழந்த பின்பு தவிசாளர் தெரிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டன.

23-08-2022 அன்று நடந்து முடிந்த வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் தெரிவிலே, தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தினால் பிரேரிக்கப்பட்டவருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் தங்களால் நியமிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட நபர் தவிசாளர் தெரிவில் வாக்களிப்பிற்கு சமூகம் கொடுக்காதலால் எமது கட்சி ஒரு வாக்கினாலே வெற்றி வாய்ப்பை தவறவிட்டமை மிகவும் வேதனையான விடயம்.

தேர்தல் ஆணையகத்திற்கு கடிதம் அனுப்ப கோரிக்கை

கூட்டமைப்பிற்குள் மூண்டது பனிப்போர் - மாவைக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்! | Sri Lanka Tna Telo Parliament Tamil Arasu Kachchi

ஆகையால், தங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு எமது கட்சி சார்பில் பதவி வழங்கப்பட்டது என்பதை நினைவுறுத்தி உடனடியாக நடைமுறைக்கு வரும் வண்ணம்,

1. அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும்

2. அவருடைய பதவி நிலையை வறிதாக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றும் எமது கட்சியால் கோரிக்கை முன் வைக்கிறோம்.

எதிர்காலத்தில் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று எமது கட்சி வழமைபோல கருதுகின்றது.

ஒன்றிணைந்து செயற்படும் கட்சி

கூட்டமைப்பிற்குள் மூண்டது பனிப்போர் - மாவைக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்! | Sri Lanka Tna Telo Parliament Tamil Arasu Kachchi

ஏனைய பல உள்ளூராட்சி மன்றங்களிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்பு முடிவுகளுக்கு கட்டுப்பட்டே எமது கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சியோடு ஒன்றிணைந்து இன்றுவரை செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கடந்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை நினைவுபடுத்த விரும்புகிறோம். எதிர்காலங்களில் இந்த ஒழுங்குமுறை சீர்குலையாமல் இருப்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

விரவில் தங்கள் பதிலையும் நடவடிக்கையும் எதிர்பார்க்கிறோம்” எனவும்  அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019