தமிழரசு கட்சிக்குள் ஏற்படுகிறதா மாற்றம் - பதவியேற்பாரா சாணக்கியன்; வெளியான தகவல்!
இலங்கை தமிழரசு கட்சியின் உப தலைவராக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறவிப்பு நாளை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள தமிழரசு கட்சியின் பொதுக்கூட்டத்தில் உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை தமிழரசு கட்சியின் உப தலைவராக உள்ள பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாகத் தெரிவித்து தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்கியனுக்கு பதவி?
இவ்வாறான நிலையிலேயே புதிய உப தலைவராக சாணக்கியனை நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியாகியுள்ளதுடன், நாளைய தினம் நடக்கவுள்ள கட்சியின் கூட்டத்தின் போது இது குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஐபிசி தமிழின் செய்திப்பிரிவில் இருந்து தொடர்புகொண்டு வினவிய போது அதனை மறுத்துள்ளார்.
பதவி விலகல்
மேலும் உப தலைவராக தன்னை நியமிப்பது தொடர்பில் இது வரை தனக்கு எந்த தகவலும் தெரியாது எனவும், ஆனால் முன்னர் உப தலைவராக இருந்த பொன் செல்வராஜா பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார் இருப்பினும் புதியவர் தெரிவு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் பதிலளித்தார்.
இவ்வாறான பின்னணியில், அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழரசு கட்சி
ஆகவே உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொருத்தமாக இருப்பார் என தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழுவும் இளைஞர் அணியும் அதனை சார்ந்த இளைஞர்கள் உட்பட அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
