சீனாவின் முக்கிய நிகழ்வை கொண்டாடும் இலங்கை தலைவர்கள்
srilanka
china
comunist party
By Jaso
சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவு தினமான இன்றையதினம் பிரதமர் மகிந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இலங்கையின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இன்றுமாலை 4 மணிக்கு சூம் தொழில்நுட்பம் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர் டியு குணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் 14 அரசியல் கட்சித்தலைவர்கள் இந்த சூம் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து தமது வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்