இலங்கைக்கான சுற்றுலாப் பயணங்கள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் விதித்திருந்த சட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை ஓகஸ்ட் 18 ஆம் திகதியின் பின்னர் நீடிக்கப்படாது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பயணங்கள் தொடர்பான எச்சரிக்கையினை பிரான்ஸ் அரசாங்கம் நேற்றைய தினம் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
எனினும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
பிரான்ஸ் அரசாங்கத்தின் பரிந்துரை

அத்துடன் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்களை நிர்வகிப்பதற்கு, உள்ளூர் பயண முகாமைகளுடன் பயணத் திட்டங்களை முன்னெடுத்து செல்லுமாறும் பிரான்ஸ் அரசாங்கம் தமது சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களை மட்டும் மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் அரசாங்கம் பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது.