உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் சுற்றுலாத்துறை..!
இலங்கையில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் உலக செய்திச் சேவை ஒன்று வெளியிட்டுள்ள நீண்ட கட்டுரை ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.
தற்போது குறைந்த செலவில் வருகை தருவதற்கு ஏற்ற நாடாக இலங்கையை சுட்டிக்காட்ட முடியும் என்பதை இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்நாட்டின் சுற்றுலாத் தலத்தை வென்ற கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, யால ஆகிய இடங்கள் குறித்து கடிதத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான அறிமுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை
இதேவேளை, பல்வேறு நெருக்கடிகளால் வீழ்ச்சியடைந்திருந்த இந்நாட்டின் சுற்றுலாத்துறை ஊடகங்களின் மூலம் தற்போது தனித்த விழிப்புணர்வைக் காட்டுவதாக இது தொடர்பான கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கட்டுரையில்,
“சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது கொரொனா எதிர்ப்பு விதிமுறைகள் இனி பாதிக்காது. மேலும், இந்த நாட்டிற்கு வருகை தரும் பார்வையாளர் ஒருவருக்கு உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளைப் பெறுவதற்கு செலுத்த வேண்டிய பணம் குறைவாகவே காணப்படும்.”என கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்பு
உலகில் மிகவும் பிரபலமான குறித்த செய்திச் சேவையின் ஊடாகப் பெறப்பட்ட இந்தச் செய்தி இலங்கையின் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்கு ஒரு சிறப்பு வெளிச்சமாக இருக்கும்.
இதேவேளை, சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு நல்ல பிம்பத்தை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சமூகத்தில் இலங்கை பற்றிய மோசமான பிம்பம் இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.
பயணிகளின் வருகை அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் வட்டாரத்தில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து சர்வதேச சமூகத்தில் இலங்கை தொடர்பில் மோசமான பிம்பம் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் இந்நாட்டிற்கு வருகை தந்தவர்களில் அதிகமானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் சனத் உக்வத்த குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறையின் முன்னேற்றம்
அதற்காக ஐரோப்பிய நாடுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விளம்பர நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தின் முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் சனத் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அதற்காக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.