இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Sri Lanka Tourism
Tourism
By pavan
இலங்கையில் கடந்த மாதங்களை விட இந்த மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாகவும் இது கடந்த ஜூன் மற்றும் மே மாதத்தை விட சற்று அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது .
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 36 ஆயிரத்து 921 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
