தொடருந்து சேவைக்கு பதில் சொகுசு பேருந்து சேவை...!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
திருத்த வேலை காரணமாக வவுனியா - கொழும்பு தொடருந்துப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால் வவுனியாவில் இருந்து கொழும்புக்கான மேலும் ஒரு சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (11.05.2023) முதல் இரவு 1.30 மணிக்கு அதி சொகுசு பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பை சென்றடையும்.
பின்னர் கொழும்பில் இருந்து நண்பகல் 12.30 இற்கு புறப்பட்டு மாலை வவுனியாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆசனப் பதிவுகளை புதிய பேருந்து நிலையத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.
இதேவேளை, ஏற்கனவே இரவு 11 மணிக்கு ஒரு அதிசொகுசு பேருந்து வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று, காலை 9.30 இற்கு மீண்டும் வவுனியா நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்