இளையோர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த யாழ் வீரர் மாதுளன்
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனான குகதாஸ் மாதுளன் என்பவரே இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரர்
அந்தவகையில் இந்த அணியில் இலங்கையின் சில பாடசாலைகளைச் சேர்ந்த 15 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த அணியின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரி மாணவரான விமத் டின்சராவும் பிரதி தலைவராக கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மாணவரான காவிய கமகே ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அணியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த உலகக் கிண்ணத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று (2026 .01.01) ஆம் திகதி நமீபியா நோக்கிப் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |