மீண்டும் போராட்டம் வெடிக்கும் - கலவர பூமியாக மாறும்; விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக மாற வாய்ப்புள்ளதாக இளைஞர் அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் மீண்டும் போராட்ட பூமியாக மாறுவதை தடுக்க முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடுமையாக கூறுகிறோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்காக உடவலவ சங்கபால கல்பொக்க நீர்நிலையின் ஒரு பகுதியில் கல்சியம் சிலிக்கேட் கனிம பாறைகளை அகழ்வு செய்யும் நிறுவனத்தின் முயற்சிகள் பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையினரால் கைது
எனினும் கடந்த நாட்களில் லங்வா நிறுவன அதிகாரிகள் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளுடன் மாதிரிகளை பெற்றுக்கொள்ள குறித்த இடத்திற்கு சென்ற போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"கல்பொக்க மலைத்தொடரைக் காப்பாற்றும் மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான நிமல் மற்றும் பியதிலக ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்."
நாட்டு மக்களுக்கான அமைப்பு
கல்பொக்க மலைத்தொடரை காப்பாற்றும் மக்கள் இயக்கம், அப்பிரதேச மக்களுக்கு மாத்திரம் ஒன்றிணைந்த அமைப்பல்ல என்பதை வலியுறுத்தும் லஹிரு விரசேகர, அரசாங்கம் சுற்றாடல் அழிவில் ஈடுபடத் தயாரானால் நாட்டு மக்கள் அதற்கு எதிராக எழுந்து நிற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
"இப்போது போராட்டம் செய்தமையால் நல்ல விடயம் என்னவென்றால், ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே நேரத்தில் விழித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
