பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Education
By Shalini Balachandran Jun 11, 2026 05:25 AM GMT
Report

இலங்கை அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளின் தரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க எச்சரித்துள்ளார்

இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ள அவர், “தேவைக்கும் இருப்புக்குமான பாரிய இடைவெளி அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறம்படச் செயல்பட 12,000 முதல் 13,000 நிரந்தர விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர்.

ஈரானில் மீண்டும் பதற்றம்! சரமாரியாக தாக்கத் தொடங்கிய அமெரிக்கா

ஈரானில் மீண்டும் பதற்றம்! சரமாரியாக தாக்கத் தொடங்கிய அமெரிக்கா

தற்காலிக விரிவுரையாளர்கள்

அத்தோடு கூடுதலாகச் சுமார் 4,000 தற்காலிக விரிவுரையாளர்களும் தேவை ஆனால் 2025 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் சேர்த்து வெறும் 6,800 நிரந்தர விரிவுரையாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka University Education Quality Drop

பல்கலைக்கழகக் கட்டமைப்பு சுமுகமாக இயங்கக் குறைந்தபட்சம் 8,000 நிரந்தர விரிவுரையாளர்களாவது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

துறை ரீதியான மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் (Ideal Ratio) ஒவ்வொரு துறைக்கும் இருக்க வேண்டிய உகந்த விரிவுரையாளர் - மாணவர் விகிதத்தை அவர் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்

  • நிர்வாகத் துறை (Management): 18 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
  • தகவல் தொழில்நுட்பம் (IT): 10 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
  • கால்நடை அறிவியல் மற்றும் பல் மருத்துவம்: 5 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.

மண்டைதீவு படுகொலையின் 40 ஆண்டுகள் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 உறவினர்கள் படுகொலை

மண்டைதீவு படுகொலையின் 40 ஆண்டுகள் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 உறவினர்கள் படுகொலை

புதிய சேர்க்கை

மேலும் தெரிவித்த அவர், “ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகக் கட்டமைப்பை விட்டு வெளியேறுகின்றனர்.

புதிதாகப் பணியில் சேருபவர்கள் பெரும்பாலும் முதலாம் வகுப்புத் தேர்ச்சி (First class) பெற்ற இளம் தகுதிகாண் விரிவுரையாளர்களாக இருக்கும் வேளையில், வெளியேறுபவர்கள் பல வருட அனுபவமும் உயர் தகுதிகளும் கொண்ட பேராசிரியர்கள் ஆவர் இதனால் கல்வி கற்பித்தலின் தரம் பாதிக்கப்படுகிறது.

பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka University Education Quality Drop

கடந்த ஆண்டு 1,400 விரிவுரையாளர்களைப் பணியமர்த்த அரசாங்கம் அனுமதி அளித்தபோதிலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாததால் அதில் 48% முதல் 49% வரையான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன (குறிப்பாக மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில்).

மேலும், பல நியமனங்கள் புதிய சேர்க்கையாக இல்லாமல் வெளி மாகாணப் பல்கலைக்கழகங்களில் இருந்து நகரப் பல்கலைக்கழகங்களுக்கான இடமாற்றங்களாகவே அமைகின்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 36% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் வேறு வழிகளில் வருமானம் ஈட்டவும் கட்டுப்பாடுள் உள்ளன.

பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்கள் : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர்

பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்கள் : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர்

விரிவுரையாளர்கள் 

விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் 20% ஆராய்ச்சிக் கொடுப்பனவுக்கும் (Research allowance) வரி விதிக்கப்படுவதால் அவர்கள் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தயங்குகின்றனர்.  

முன்பு விரிவுரையாளர்கள் ஓய்வுபெறும்போது பல்கலைக்கழகங்களே நேரடியாகப் புதியவர்களை நியமிக்க முடிந்தது.

பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka University Education Quality Drop

ஆனால் இப்போது மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் (Department of Management Services) அனுமதியைப் பெற வேண்டியுள்ளதால் புதிய நியமனங்களுக்குப் பல மாதங்கள் தாமதமாகிறது.

இந்த நிலைமையிலும் பல்கலைக்கழகங்களை ஓரளவுக்கு இயக்க முடியும் ஆனால் வழங்கப்படும் பட்டங்களின் தரம் நிச்சயம் வீழ்ச்சியடையும்.

இந்தத் தர வீழ்ச்சி உடனடியாகத் தெரியாது ஆனால் இன்னும் சில வருடங்களில் இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகளின் தரம் மூலமாக இது நாட்டிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!

ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026