பல்கலைக்கழக வெற்றிடங்கள் - பெப்ரவரி 15 க்குள் பூர்த்தி..! வெளியாகிய அறிவித்தல்
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By pavan
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தர மீள் கணக்கெடுப்பு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய கல்வியாண்டுக்கான மருத்துவ பீடங்கள் உட்பட பல பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
க.பொ.த உயர்தர தர பரீட்சை
இந்நிலையில், தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர தர பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி