நாடு இப்படியே சென்றால் எரிவாயு மட்டுமல்ல மக்களின் இதயங்களும் வெடித்துச் சிதறும்!
நாட்டில் தற்போதுள்ள இதே நிலைமை தொடர்ந்து சென்றால் சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமல், மக்களின் இருதயமும் வெடித்து சிதறும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கை மக்கள் பசிக்காக குப்பை கூடையை கிளறி உணவை தேடும் நிலைமைக்கு சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
1977 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இலங்கை இப்படியான அனர்தத்தை எதிர்நோக்கியது. மீண்டும் அதே யுகத்தை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கின்றது. 1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை முடிவுக்கு கொண்டு வந்த நாட்டுக்கு மீண்டும் சௌபாக்கிய நிலைமையை ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்திக்கொடுத்தது.
அரசாங்கம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடம் சென்று கடனுதவியை பெறாது, வட்டி முதலாளிகளிடம் சென்று கடனை பெற்றது. இவ்வாறு கடன் முதலாளிகளிடம் பெறும் பணத்தை கொள்ளையிட முடியும் என்பதால், அரசாங்கம் அவ்வாறு செய்தது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.