கடன் மறுசீரமைப்பு - சீனா : இந்தியாவின் முடிவுக்காக காத்திருக்கும் இலங்கை
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க உடன்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் முதலில் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
சீனா மற்றும் இந்திய ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் அந்தந்த நாடுகளின் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த உதவும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்படுவது சிறந்தது என சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடமைகளை நிறைவேற்றாமல், நீண்ட காலத்திற்கு இவ்வாறான நிலையில் இருக்க இலங்கையும் விரும்பவில்லை எனவும் அது நாட்டுக்கும் மக்களுக்கு மாத்திரமல்லாமல், இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நன்மையானது அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை
ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்ட முடியும் என்ற போதிலும் இது ஏனைய அனைத்து தரப்பினரையும் பொறுத்தது என கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முக்கியமான கடன் வழங்குநர்கள், உண்மையில் அந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் வழங்குநர்களுக்கு தேவையான நாட்டின் கடன்கள் குறித்த அனைத்து தகவல்களையும் இலங்கை தற்போது வழங்கியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
