வவுனியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ: பலமணி நேர போராட்டத்தில் தீயணைப்பு பிரிவினர்!
Vavuniya
Sri Lanka
Northern Province of Sri Lanka
Wildfire
By pavan
வவுனியா மாமடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் பல மணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவம் நேற்று (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமடு சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடிரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பிரிவினர்
அதனையடுத்து சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியமையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த குழுவினர் பல மணிநேர போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது காற்றின் வேகம் காரணமாக ஏற்பட்டுள்ளதா போன்ற பல்வேறு கோணத்தில் மாமடு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி