வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நோயாளர்கள்!
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் அவதியுற்றள்ளனர்.
நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சங்க போராட்டம்
சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கின்றது.
பணிப் புறக்கணிப்பு
இதற்கு ஆதரவளிக்கும் முகமாகவே வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த பரிசோதனைப் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b296a47e-7bf7-4208-8d2b-bebcbbb509fb/23-63e35c08e345a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f0ad77b8-7e5d-43a3-af30-67093ad0cd4b/23-63e35c092810c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f93f1c1d-1633-4fad-b05f-f19b1d46d33f/23-63e35c09608f8.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)