வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்!
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Kalaimathy
வவுனியா பறனட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வாகன சாரதி உட்பட மூவரே காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





1ம் ஆண்டு நினைவஞ்சலி