சுப்பர் 8 முதல் சுற்றில் இலங்கை அணியை பந்தாடிய இங்கிலாந்து அணி!
புதிய இணைப்பு
ரி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
பல்லேகலே மைதானத்தில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 147 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த தோல்வி ரி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆறாவது தோல்வியாகும்.
இன்றைய போட்டியுடன், ரி20 உலகக் கோப்பையில் இரு நாடுகளுக்கும் இடையே 7 போட்டிகள் நடந்துள்ளன, அவற்றில் இலங்கை அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.
இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.
இடைவிடாது பெய்த மழை
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழை காரணமாகப் போட்டியைக் கைவிட ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.
இதற்கமைய, இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |