மட்டக்களப்பில் முகாமிட்டுள்ள இலங்கை அதிபர் ரணில் - நடக்கும் மர்மம் என்ன..?
அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது தனிப்பட்ட காரணத்திற்காக மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்புக்கான தனது தனிப்பட்ட விஜயம் என்பதில் சொல்ல வரும் செய்தி என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது தனது தனிப்பட்ட விஜயமென்று கூறப்படுகின்ற போதிலும் நேற்று காலையில் இருந்து பல கட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பண பலம் உள்ள வர்த்தகர்களையும் சந்தித்து வருவதாக அறிய முடிகின்றது.
ஏற்கனவே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கின்ற வேளையில் அதிபரின் இந்த விஜயமானது ஏன் எதற்காக வந்துள்ளார் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளதாக இருக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் அவர்கள் IMF பண உதவி கிடைப்பதற்கான சீனாவின் உத்தரவாதம் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் திடீரென மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அதிபர் மேற்கொண்டுள்ள விஜயமானது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சீனாவின் ஆதிக்கம் ஊடுருவி உள்ளதாக பல செய்திகளும் புலனாய்வு தகவல்களும் கிடைக்கப்பெற்றிருக்கின்ற நிலையில் அதிபரின் குறித்த விஜயமானது சொல்லவரும் செய்தி என்ன என்பது ஒரு பாரிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
அது மட்டுமன்றி சில வாரங்களுக்கு முன்னதாக சீனாவின் முக்கியஸ்தர்கள் பலர் மட்டக்களப்பு பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே கிழக்கு மாகாணத்தை சீனாவிற்கு தாரை வார்த்து கொடுப்பதற்கான ஒரு திருட்டுத்தனமான நடவடிக்கையாக இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
நாட்டில் மக்கள் பொருளாதார சுமைக்கு மத்தியில் தள்ளப்பட்டு பாரிய இன்னல்களை முகம் கொடுத்து வருகின்ற நிலையில் தேசிய பட்டியல் ஊடாக வந்த ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தனிப்பட்ட விஷயங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வார செய்தி என்ன என்பது ஒரு புரியாத புதிராக இருக்கின்றது.
இன்று பூகோள அரசியலில் இந்தியா மற்றும் சீனாவுக்கான ஆதிக்கங்கள் இலங்கையில் திணிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கொண்ட விஜயமானது பல சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.
கிழக்கை மீட்போம் அபிவிருத்தி செய்வோம் என்ற தொணிப் பொருளில் பிள்ளையானும் உரிமையுடன் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை மேற்கொள்வதாக வியாழேந்திரன் ஒருபுறம் தேசியத்திற்காகவும் தமிழ் மக்களது சுய நிர்ணய உரிமைக்காகவும் இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னொரு பக்கமும் முட்டி மோதி கொண்டிருக்கின்ற நிலையில் நாட்டின் தலைவர் அவர்கள் இரகசிய விஜங்கள் மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தை தாரை வருகின்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை மறைமுகமாக சொல்ல வருகின்றார் என்ற பாரிய சந்தேகமும் எழும்பியுள்ளது.
நாட்டு மக்களின் ஆதரவின்றி தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழைந்த ரணில் விக்ரமசிங்க மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்காமல் தான் ஒரு சர்வாதிகாரி என்ற ரீதியில் நாட்டை முன்னெடுத்துச் செல்வது மக்கள் மத்தியில் இன்று வரை அது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
இருந்தபோதிலும் இலங்கை நாட்டில் எதிர்காலத்தில் ஒரு தலைவர் மக்கள் ஆணையுடன் வரவேண்டும் என்பதற்காக கொழும்பு அரசியலில் பாரிய முன்னெடுப்புகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற வேலையில் ரணில் விக்ரமசிங்க தனது ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் தொடர்ச்சியாக அதிபராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் மக்கள் மத்தியில் பெரும் சவாலாகவே இருக்கின்றது.
வரிசை யுகத்தை குறைத்துள்ளேன் என்று கங்கணம் கட்டும் நாட்டின் தலைவர் ஜனநாயக ரீதியாக போராடும் மக்களை அடக்க நினைப்பது ஒரு ஜனநாயக விரோத செயற்படாவே பார்க்கப்படுகின்றது.
இதன் மர்மம் கலைக்கப்படுமா அல்லது என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பாக நாம் ஆராய உள்ளோம் தொடர்ச்சியாக இந்த விஜயம் தொடர்பாக உண்மை நிலையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடைப்பாட்டில் இது குறித்த மேலதிக தகவல்களை எதிர்வரும் காலங்களில் வழங்க காத்திருக்கின்றோம்
