சுற்றுலாத் தலங்களுக்கு வந்துகுவியும் வெளிநாட்டு பயணிகள்
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் (Department of Forest Conservation) உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறி்த்த தகவலை, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர்களில் 40% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என அமைச்சர் கூறியுள்ளார்.
அதன்படி, நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகளை தயாரித்து, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று, அதற்கான சட்டத் திருத்தங்களைச் தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காடுகளை பாதுகாப்பதற்காக, இந்த ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |