1.2 பில்லியன் டொலர் நட்டம் - ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை..! சிறிலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் வெளியான தகவல்

SriLankan Airlines Nimal Siripala De Silva Jaffna International Airport Mattala International Airport
By Kanna Sep 23, 2022 04:13 PM GMT
Report

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் எதுவுமில்லை. சேவையில் ஈடுபடுத்தப்படும் 23 விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

பலாலி விமான நிலையம்

1.2 பில்லியன் டொலர் நட்டம் - ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை..! சிறிலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lankan Airlines Losses 1 2 Billion Lost

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " கொரோனா தொற்று நோய் மற்றும் நாடு முழுவதும் பரவிய போராட்டங்கள் காரணமாக விமான பயணங்கள் குறைந்தன. இரத்மலானை மற்றும் பலாலி விமானங்களை திட்டமிட்டப்படி முற்றாக பிரயோசனப்படுத்த முடியாமல் போயுள்ளது.

பலாலி விமான நிலையத்திற்கான சேவைகளை நடத்துவதாக சில விமான சேவை நிறுவனங்கள் வாக்குறுதி வழங்கின. எனினும் ஒரு விமானம் கூட அங்கு வரவில்லை.

எயார் இந்தியா நிறுவனம் பலாலிக்கான சேவையை நடத்த இணங்கியது. எனினும் அது நடக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்

1.2 பில்லியன் டொலர் நட்டம் - ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை..! சிறிலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lankan Airlines Losses 1 2 Billion Lost

மாலைதீவு விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து இரத்மலானை விமான நிலையத்திற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமும் தோல்வியடைந்துள்ளது.

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மாதம் 100 மில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்ககிறது.

முதலீட்டாளர் ஒருவர் மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அரசாங்கம் அதனை ஆராயும் " எனக் குறிப்பிட்டார். 

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016