உலகின் சக்திவாய்ந்த 100 பேரில் இடம்பிடித்த இலங்கை பெண்மணி
உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கைப் பெண் திருமதி ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண்மணி திருமதி கால்டெரா என்றும், அவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் தி டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கைப் பெண்கள்
ஓரினச்சேர்க்கைப் பெண்கள் நெருங்கிய உறவில் ஈடுபடுவது மனித உரிமை மீறலாகும்.
அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த உரையாடலின் விளைவாக, டைம்ஸ் இதழ் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக டைம்ஸ் 100 என்ற பெயரில் ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டது.
வருடாந்தம் டைம்ஸ் இதழ்
அதன் பின்னர், வருடாந்தம் டைம்ஸ் இதழ் உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் 100 பேரின் பெயர்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |