தனது மனைவியை தாக்கிய சிறிலங்கா இராணுவ உயரதிகாரி கைது
arrest
police
wife
srilanka army
By Sumithiran
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் மேஜர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
பாணந்துறை தலைமையக காவல்துறை பரிசோதகர் சமிந்த பிந்துவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
