வெளிநாட்டில் காணாமல் போன இலங்கை வீரன்..!
இலங்கையின் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீளம் பாய்தலில் தேசிய சாம்பியனும், முப்பாய்ச்சல் போட்டிகளில் தேசிய சாதனையையும் நிலைநாட்டியுள்ள கிரேசன் தனஞ்சய என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த வேளையில் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக விபரங்கள்

இந்த போட்டித் தொடர் தனிப்பட்ட ரீதியான அழைப்பிதழின் அடிப்படையில் நடைபெற்றுள்ளதாகவும் இதற்கும் தேசிய மெய்வல்லுனர் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனஞ்சய காணாமல்போன விவகாரம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் சில விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக செல்லும் போது, தப்பிச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.