இலங்கை அணியின் மோசமான தோல்வி: ஆராய்வதற்கு இந்தியா செல்லும் பிரதிநிதி
உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவு குறித்து ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் இந்தியா செல்லவுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகளும் தெரிவுக்குழுவும் உடனடியாக தமது பதவிகளை விட்டு விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த03 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
கடும் பின்னடைவு
அதனை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றிய மோகன் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிடம் சமர்ப்பித்தார்.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் கடும் பின்னடைவு குறித்து ஆராய்வதற்காக கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் இந்தியா செல்கிவிருக்கின்றார்.
தீர்மானம்
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி சந்திக்கும் கடும் பின்னடைவு குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட உள்ளது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை நம்பமுடியாத அளவிற்கு பாரிய தோல்வியை சந்தித்தது மற்றும் கிரிக்கெட் நிறுவனங்கள் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.